மொரகஹகந்த மின் உற்பத்தி பரீட்சார்த்த நடவடிக்கைக்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில்

Maithripala Sirisena Moragahakanda

Maithripala Sirisena Moragahakanda,

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை மின் உற்பத்திக்கு பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பரீட்சார்த்த நடவடிக்கைக்காக நீரை வெளியிடும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

ரஜரட்ட மக்களின் கனவை நனவாக்கும் வகையில் இந்த திட்டம் இன்று (02) பிற்பகல் வேளையில் ஜனாதிபதியினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

தற்போது நிலவும் மழைக் காலநிலையைத் தொடர்ந்து மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டத்தில் மின் உற்பத்திக்குத் தேவையான 178 மீட்டர் அளவு நேற்று அடையப்பெற்றுள்ளது.

இன்று பிற்பகல் மொரகஹகந்த நீர்த்தேக்க வளாகத்திற்கு சென்ற ஜனாதிபதி அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளைப் பார்வையிட்டதுடன், மின் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான பரீட்சார்த்த நடவடிக்கைக்காக நீரை வெளியிட்டுவைக்கும் நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.

இது ரஜரட்ட மக்களுக்காக தான் நீண்டகாலமாக கண்ட கனவு எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அக்கனவு நனவாகும் மற்றுமொரு முக்கிய தினமான இத்தினத்தை தாம் எதிர்பார்த்திருந்ததாகவும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]