மஹிந்த ராஜபக்ஷவின் பிரஜா உரிமை?ராஜித சேனாரத்ன

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்(Mahinda Rajapaksa ) பிரஜா உரிமையை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரஜா உரிமையை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளவில்லை.

அரசாங்கம் இவ்வாறான தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாக பரவி வரும் பிரச்சாரங்களில் எந்தவித உண்மையும் இல்லை என்று அமைச்சரவையின் இணை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
Mahinda Rajapaksa
சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயற்பட்டு வருவதாகவும் அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை. என்றும் அமைச்சர் கூறினார்.

பெரிய அளவிலான ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகள் தாமதப்படுத்தப்படுவது தொடர்பில் தானும் திருப்தியடையவில்லை என அமைச்சர் குறிப்பிட்டார். குறிப்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளருடன் சம்பந்தப்பட்ட மிக் யுத்த விமானக் கொடுக்கல் வாங்கல், டுபாய் வங்கிக் கணக்கு, றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் படுகொலை போன்ற பெரிய அளவிலான ஊழல் மோசடிகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தினார்.

சிறிய சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதால் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்ப்படுகின்றது. அதனால் நல்லாட்சியைப் பாதுகாக்கும் பொறுப்பு தமக்கு இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். இந்த விடயத்தில் சில அதிகாரிகள் உரிய முறையில் தமது கடகைகளை நிறைவேற்றவில்லை என்றும் அமைச்சரவையின் இணை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்