ரத்தத்தில் கிருமித் தொற்று இருந்தால், நாம் ரத்த தானம் செய்ய முடியாது
அத்தோடு நமது ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பு. ரத்தத்தில் கலந்த பாக்டீரியாக்களை பிரித்தெடுப்பது மருத்துவர்களுக்கு சவாலான வேலை.
இதை எளிதாக்க, காந்தத்தை பயன்படுத்தலாம் என கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கான ‘ஆன்டிபாக்டி’யை மருத்துவர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
இதனை மிக நுண்ணிய இரும்புத் துகள்களில் பூசி, அத்துகள்களை ரத்தத்தில் கலந்தால் அது நோயாளியின் உடலிலிருந்து ரத்தத்தை சுத்திகரிக்கும்.

அத்தோடு ‘டயாலிசிஸ்’ இயந்திரத்தில் கொடுத்து காந்தப் புலத்திற்கு உட்படுத்தினால்
ரத்தத்தில் உள்ள இரும்புத்துகள்கள் உடனடியாக பிரிக்கப்பட்டு விடும்.
பிரிக்கப்பட்ட துகள்களில் பூசப்பட்டுள்ள ஆன்டிபாக்டிகள், பாக்டீரியாக்களையும் கவர்ந்து வரும் என்பதால், ரத்தம் துாய்மையானதாகி விடும்.

விலங்கு ரத்தத்தில் இந்த முறை வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. எனவே, விரைவில் மனித ரத்தத்திலும் காந்த சுத்திகரிப்பு முறையை சோதிக்க ஹார்வர்டு மருத்துவர்கள் தயாராகி வருகின்றனர்.