‘சிறிய இதயத்துக்கு சுகம் தாருங்கள்’

‘சிறிய இதயத்துக்கு சுகம் தாருங்கள்’ என்ற மனிதநேயத்துக்கான பாத யாத்திரை, இலங்கை சிறுவர்நோய் நிபுணர்களின் நிறுவனத்தால் கொழும்பில் இன்று (14) நடத்தப்படவுள்ளது.

இதய நோய்களினால் வருடாந்தம் மரணிக்கும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக, லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலையுடன் இணைந்து, முழுமையான வசதிகளை கொண்ட இதய அறுவைச் சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவினை உருவாக்குவதற்கான நிதியைத் திரட்டுவதற்கே, இந்தப் பாதயாத்திரை நடத்தப்படவுள்ளது.