மாணவர்கள் முன்னிலையில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மாணவி

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில், 20 வயது லஷ்மி என்ற மாணவி, அக்கல்லூரியின் பழைய மாணவர் ஒருவரால் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.முன்னதாக,  நேற்றைய தினம் மேற்படி கல்லூரியில் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஏராளமான மாணவர்கள் வந்திருந்தனர். அப்போது, திடீரென கல்லூரி வகுப்பறைக்கு வந்த, அக்கல்லூரியின் பழைய மாணவர் ஆதர்ஷ், அங்கு, லஷ்மி என்ற பெண் மீது பெட்ரோல் ஊற்றியுள்ளார்.
student
  இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அங்கிருந்து ஓட, அவரை விரட்டிப் பிடித்த ஆதர்ஷ், அவரது உடைக்கு தீ வைத்துள்ளார். தீ மள  மளவென்று பரவிய நிலையில், லஷ்மி உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, தன்னுடைய உடலிலும் பெட்ரோலை ஊற்றிய ஆதர்ஷ், தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
  கிட்டத்தட்ட முழுவதுமாக எரிந்த  நிலையில், இருவரையும் மீட்ட கல்லூரி மாணவர்கள், உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆயினும் சிகிச்சை பலனின்றி இருவரும் தற்போது உயிரிழந்து விட்டனர்.