என் வாயைக் கிளறாதீர்கள்… விவேகம் பற்றி கஸ்தூரி

Kasturi vivegham tweet -இப்போதைக்கு ‘விவேகம்’ அலை ஓயாது போலிருக்கிறது. ‘விவேகம்’ நெகட்டிவ் விமர்சனங்கள் அஜித் ரசிகர்களை பாதித்தது மட்டுமில்லாமல் சில பிரபலங்களும் ‘விவேகம்’ பற்றி நெகட்டிவ் கமென்ட் அடித்து வருகிறார்கள். அதில் கஸ்தூரியும் ஒருவர். இவரிடம் டிவிட்டரில் ‘’விவேகம் படத்தைப் பார்த்தீர்களா…?’’ என்று ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டார்.

அதற்கு கஸ்தூரி, ‘’பார்த்தேன்… பார்த்தேன்… முதல் நாள் முதல் காட்சி.. அய்யோ என் வாயைக் கிளறாதீர்கள்… நானே கம்முனு இருக்கேன்’’ என்று நக்கலாக பதில் கூறியுள்ளார். கஸ்தூரியின் இந்த நக்கலால் அவர் மீது செம கடுப்பில் உள்ளார்கள் அஜித் ரசிகர்கள்.

தான் சார்ந்திருக்கும் திரைத்துறை மட்டுமல்லாமல் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும், நடிகர்களின் அரசியல் பிரவேசம் குறித்தும், சமூக வலைத்தளம் மற்றும் ஊடகங்கள் வாயிலாக தனது கருத்தை நடிகை கஸ்தூரி சமீப காலமாக தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.