முரளிதரன் தலைமையில் புதிய கட்சிக்கான அலுவலகம் திறந்து வைப்பு

முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவர்களில் ஒருவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் உருவாகியுள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மட்டக்களப்பு, கல்லடி, புதிய கல்முனை வீதியில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உபதலைவரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மத்திய குழு உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.