ஆக்கம்
P.Manikandan, Research Scholar, center for Bharathidasan studies, Bharathidasan University, Trichy. – 24

முன்னுரை

கண்ணதாசன் என்ற மாக்கவிஞரின் தத்துவப் பாடல்களும் மெய்சிலிர்க்க வைக்கிறது. தத்துவக் கவிதைகளும் உள்ளுணர்வுகளைத் தட்டி எழுப்புகிறது. சிறந்த நாவல் படைப்புகளும் எண்ண ஓட்டங்களை எட்டிப் பிடிக்கிறது. இப்படிப்பட்ட உயர்ந்தப் படைப்புகளை நமக்கு வாரி வழங்கிய புகழ்ப்பெற்றக் கவிஞரின் சில தத்துவங்களை உங்கள் பார்வைக்கு இட்டுச் செல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். (Kannadasan Poetry)

கண்ணதாசனின் சிறப்புத் தன்மைகள்

 

Kannadasan
Kannadasan

சிறுகூடல் பட்டியில் அவதறித்தவர். இயற்பெயர் முத்தையா புனைப்பெயர் காரை முத்துப்புலவர் வணங்காமுடி என்பதாகும்.. கண்ணதாசன் கவிதைகள் என்றத் தலைப்பில் ஏழுத்தொகுதிகளாக இவருடைய கவிதைகள் வந்துள்ளன. சிறந்த வசனத்திற்;கான விருது (1961) குழந்தைக்காக  சாகித்ய அகாதெமி விருது சேரமான் காதலி (1980) இவை இரண்டும் இவர் பெற்ற விருதுகள். இவர் படைப்புகளில் இயேசு காவியம் அர்த்தமுள்ள இந்துமதம் வனவாசம் போன்றவை குறிப்பிடத்தக்கப் படைப்புகள். இவர் நாவலாசிரியர்  சிறுகதையாசிரியர் தமிழக அரசவைக் கவிஞர் என்றப் பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரர். ‘காட்டுக்கு ராஜா சிங்கம் கவிதைக்கு ராஜா கண்ணதாசன்’ என்று கர்மவீரர் கண்ணதாசனைப் புகழ்ந்திருக்கிறார்.

‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை’ என்று கண்ணதாசனே அறிவித்துக்கொண்டார்.

‘கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று கன்னியின் காதலி எனும் திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதிய தொடக்கப்பாட்டு ஆகும்.

‘கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே’ என்று மூன்றாம் பிறைத் திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதிய இறுதிப்பாட்டு ஆகும்.

கண்ணதாசன் தன்னுடைய இறப்பிற்குப் பதினொரு ஆண்டுகளுக்கு முன்பே இரங்கற்பா பாடி எழுதி வைத்துக்கொண்டார். அதன் கடைசிப் பந்தியை காண்போம்.

‘போற்றியதன் தலைவனிடம் போகின்றேன்
என்றவன்வாய் புகன்ற தில்லை;
சாற்றியதன் தமிழிடமும் சாகின்றேன்
என்றன்வாய் சாற்ற வில்லை;
கூற்றவன் தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன்
படுத்தவனைக் குவித்துப் போட்டு
ஏற்றியசெந் தீயேநீ எறிவதிலும்
அவன்பாட்டை எழுந்து பாடு!’

இவை கண்ணதாசன் கவிதை தொகுதி (4)ல் உள்ளது.

தன்னை அறிந்துக்கொள்ளும் தத்துவங்கள்
பூஜ்ஜியத்துக் குள்ளே ஒரு
ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் – அவனைப்
புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்!

கண்ணதாசன் கவிதைகள் Kannadasan Poetry தொகுதி (3)

அவன்தான் இறைவன்  இந்த உலகம் ஒர் உருண்டையானது. அதில் தான் நாம் வாழ்கின்றோம்
என்ற எண்ணம் இருந்தாலே ஒருவன் தன்னை அறிந்துக்கொள்ள முடியும். என கண்ணதாசன்  உரைக்கிறார்.

‘ஒன்பது ஓட்டைக் குள்ளே
ஒருதுளிக் காற்றை வைத்து
சந்தையில் விற்றுவிட்டான் ஒருவன் – அவன்
தடம் தெரிந்தால் அவன்தான் இறைவன்!’

 

கண்ணதாசன் கவிதைகள் தொகுதி (3)-அவன்தான் இறைவன்-{49-52 }

நமது உடலானது ஒன்பது துவாரங்களை உள்ளடக்கியது. மற்றும் காற்றுகள் நிறைந்த ஒரு பை தான் நமது உடல். இவ்வாறு இவ்வுலகத்தில் நாம் ஒரு உயிராக விடப்பட்டிருக்கிறோம். எந்நேரமும் நம்மை விட்டு நம் உயிர் பிரிய வாய்ப்பு நிறைந்திருக்கிறது என்பது நிதர்சனம்.

‘தான் பெரிய வீரனென்று
தலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும்
நாள்குறித்துக் கூட்டிச்செல்லும் ஒருவன் –
அவன்தான்
நாடகத்தை ஆடவைத்த இறைவன்!’

கண்ணதாசன் கவிதைகள் Kannadasan Poetry தொகுதி (3)-அவன்தான் இறைவன்-{61-64}

இவ்வுலகில் சிறந்த வீரனாகவும் பெரிய செல்வாக்குப் பெற்றிருந்தாலும் இறப்பு என்பது

உண்டு என்று வலியுறுத்துவதே ஆகும்.
உயிர்கள் பிறந்த தத்துவம்
‘மண்ணில் ஆயிரம் மலர்க ளமைத்தவன்
மனதில் ஆயிரம் அலைக ளளித்தவன்
விண்ணில் ஆயிரம் மீன்கள் சமைத்தவன்
வெளியில் ஆயிரம் உயிர்கள் படைத்தவன்
எவ்வூ ருடையான் என்றீரோ?
எம்மூர் வாரும் சொல்கின்றேன்!’

 

கண்ணதாசன் கவிதைகள் தொகுதி (3)-எங்கே அவன்? {1-6}

நிலப்பரப்பில் மனிதன் உருவாகிறான். அவனது எண்ண ஓட்டங்கள் அலைகளாய் அடிக்கிறது. விண் பரப்பில் நட்சத்திரங்கள் குடிகொண்டுள்ளன. பரந்த சுற்றளவில் உயிர்களும் வாழ்கின்றன என்பதை கூறுவதே ஆகும். மனிதனின் தோற்றம் குறித்தத் தத்துவம்

‘மன்னு மிந்த வையகந்தன்னிலே
மனிதன் என்றொரு வடுவை யடைத்தனன்!
பின்ன ரிந்த உலகை யளந்தனன்
வெற்றி பெற்ற பெருமையி லாழ்ந்தனன்!
மனித னிந்த வையகம் வந்ததும்
வான தேவன் மோனத்தி லாழ்ந்தனன்!
பூமி முற்றும் போர்க்கள மாயது
பொறுமைத் தேவன் புன்னகை பூத்தனன்!’

 

கண்ணதாசன் கவிதைகள் Kannadasan Poetry தொகுதி (3)-மனிதன் தோற்றம்-{37-44}

எல்லாவற்றையும் முதலில் படைத்ததாகவும் பின்பு தன் மனைவியின் கட்டளைப்படி மனிதனை இவ்வுலகத்தில் படைத்து விட்டு உலகை ஒரு வலம் வந்து விட்டுஇ இறைவன் தியானத்தில் மூழ்கிவிடுகிறான். பூவுலகில் ஒருவருக்கு ஒருவர் சண்டைகளும்இ மற்றவர்கள் மீது பல போட்டிகளும்இ ஒருவரின் தொடர் வளர்ச்சியைக் கண்டு மிகுந்தப் பொறாமையடைதலும் முதிர்ச்சியடைந்ததாக மாறிவிட்டது.

மனிதன் மண்ணுலகிற்கு வந்தப் பின்பே இந்த பூவுலகமானது அமைதி களைந்தது என்பதை மிகத் தெளிவாக கண்ணதாசன் சுட்டிக்காட்டுகிறார்.

மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பாய் தத்துவங்கள்

‘படைத்தநின் படைப்பில் யாயும்
பரிணாம வளர்ச்சி கொண்டு
வெடித்ததோர் வெடிப்பில் இன்று
விதவிதக் குணங்கள் தோன்றித்
துடித்தலை அறிவா யாயின்
தொடக்கத்தில் நீ வகுத்த
அடித்தளம் போயிற் றன்றோ?
ஐய! நின் பதில்தானென்ன?’

 

கண்ணதாசன் கவிதைகள் Kannadasan Poetry தொகுதி (3)-இறைவனும் மனிதனும்-{17-24}

உன்னுடையப் படைப்பில் புதிய பரிணாம வளர்ச்சி வந்துவிட்டது. ஆனால் பல விதக் குணங்கள் உருவாகிவிட்டது. இவையெல்லாம் தெரிந்து நீ புதுப்பித்த ஆரம்பம் எங்கே மறைந்து சென்றது இறiவா நீ கூறு என மனிதன் வாயிலாக இறைவனிடம் கண்ணதாசன் கேள்விக் கேட்கிறார்.

‘பொன்னாசை உறவை வெட்டும்
பொருளாசை பகையை மூட்டும்
பெண்ணாசை மிருக மாக்கும்
பேராசை உயிரை வாங்கும்;
மண்ணாசை போரில் மூழ்கும்
மனத்தினை உள்ளே வைத்த
என்னாசை யாலே தானே
இத்தனை ஆசை யெல்லாம்!’

 

கண்ணதாசன் கவிதைகள் தொகுதி Kannadasan Poetry  (3)-இறைவனும் மனிதனும்-{95-102}

ஆபரணங்களுக்கு ஆசைப்படுவதால் உறவுகள் முறிந்து விடும். பொருளுக்கு ஆசைப்படுவதால் பல பகைகளைச் சந்திக்க நேரிடும். பெண்களிடத்தில் ஆசைப்படுவதால் மனிதனை விலங்கின குணங்களில் மூழ்கடித்து விடும். தற்கால சூழலில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதை நம் கண்முன்னேப் பல ஊடகங்கள் செய்தித்தாள்கள் மூலம்; பார்க்கிறோம். ஆனால் அன்றே கண்ணதாசன் ‘பெண்ணாசை மிருக மாக்கும்’ என உணர்த்திருக்கிறார். மிகுந்த ஆசைப்படுவதால் உயிர் பிரிந்துவிடும். நிலத்திற்;கு ஆசைப்படுவதால் அது அழிவில் முடியும். மனத்தினை உள்ளே வைத்ததால் தான் இந்நிகழ்வுகள் எல்லாம் நடைபெறுவதாக இறைவன் வாயிலாக கண்ணதாசன் பதில் கூறிகிறார்.

முயற்சிக்கு ஊன்றுகோலாக வித்திடும் தத்துவங்கள்

‘பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்’

 

கண்ணதாசன் கவிதைகள் Kannadasan Poetry தொகுதி (3)-  மணி; நான் ஒலி!{1-4 }

பிறப்பின் கூறுகளை ஆராய அவன் உலகில் அவதறித்தாலே பிறப்பு என்பது என்ன என உணரமுடியும். படிப்பின் தன்மைகளை கண்டுணர அவன் பல வகையில் படிப்பதற்கு  முயற்சிச் செய்தாலே படிப்பு என்பது என்ன என புரிந்துக்கொள்ள முடியும். இவ்வாறு கவியரசு வலியுறுத்துகிறார்.

‘அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்’

 

கண்ணதாசன் கவிதைகள் Kannadasan Poetry தொகுதி (3)-நீ மணி; நான் ஒலி!{5-8 }

அறிவின் சிறப்புகளை உற்றுநோக்க பலதரப்பட்ட நூல்களைக் கற்றுத் தெரிந்துக்கொள்வதே சிறந்தப் பண்பாகும். அன்பின் தன்மைகளைக் காண்பதற்குப் பிறரிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்தளித்து வாழ்ந்தாலே அதனைக் காணமுடியும். என கண்ணதாசன் கூறுகிறார். நால்வர் எனும் விந்தைகளாய் தத்துவங்கள்

‘அறிவுரை கூறும் அனைவரும் கூறும்
கனிவுரை ஒன்று: ‘கண்ணேஇ உலகில்
நாலுபேர்! மதிக்க நட் அது நீதி!’

கண்ணதாசன் கவிதைகள் தொகுதி (3)-யார் நால்வர்-{1-3}

உலகில் பல பெற்றோர்கள் பிள்ளைகளிடத்தில் அறிவுரைக் கூறும்போதுஇ நான்குபேர் உன்னை மதிக்கும் அளவில் வாழ்வதற்குத் தயார்படுத்திக்கொள் அதுதான் உலக தர்மம் என அவர்கள் கூறுகிறார்கள். இதனையே கண்ணதாசன் வலியுறுத்துகிறார்.

முடிவுரை

அரிஸ்டாட்டில்
அரிஸ்டாட்டில்

அரிஸ்டாட்டில் முதல் விவேகானந்தர் வரை எத்தனையோ பேர் தத்துவங்களை உலகிற்கு அளித்திருக்கிறார்கள். ஆனால் கண்ணதாசன் மக்களோடு மக்களாக இணைந்து கவிதைகளைத் தத்துவங்களாக வடித்திருக்கிறார். ஒரு மனிதன் உலகில் எப்படி வாழவேண்டும் என்பதையும்இ அவன் எம்மாதிரியானச் சிக்கல்களையும் திறம்பட கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டும் என்பதையும்இ நன்மை எது? தீமை எது?

என ஒருவனுக்கு புரிதல் தன்மையைக் கொண்டுவர வேண்டும் என்பதையும்இ மிகவும் நுணுக்கமாக மக்களுக்குப் புரியும் வகையில் தத்துவங்களைக் கொண்டுவந்த சிறப்பிற்குரியவர் கண்ணதாசன் ஆவார். இவருடையத் தத்துவங்கள் வாழ்க்கைக்குப் பயன்படும் ஒன்றாகத் திகழ்கிறது.

பார்வை நூல்கள்
1.கண்ணதாசன் கவிதைகள் (தொகுதி- 3 ) – கண்ணதாசன் பதிப்பகம்
2.பன்முக நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு – முனைவர் கா.வாசுதேவன்
3.அரிஸ்டாடிலின் தத்துவங்கள்- என்.சிவராமன்