களுத்துறை துப்பாக்கிச் சூடு : சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை திட்டமிட்டதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட சிலரை அடையாளம் காண முடிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, இவர்களைக் கைதுசெய்வதற்கான விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவர்களில் சிலர் போலி கடவுச் சீட்டுக்களுடன் வௌிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

எனவே, இதனைத் தடுக்கும் பொருட்டு கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களுக்கு தகவலளிக்கப்பட்டுள்ளதோடு, விஷேட பொலிஸ் குழுக்களும் விசாரணைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.