கச்சதீவு திருவிழாவின் போது மலேரியா தொற்றை தடுக்க நடவடிக்கை

கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது மலேரியா தொற்றை தடுக்க நடவடிக்கை மேற்கொளப்படவுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன அதிகாரிகளை பணித்துள்ளார்.

இந்தத் திருவிழாவில் இந்தியாவையும் இலங்கையையும் சேர்ந்த பெருமளவு அடியார்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.