பெண்கள் அனைவருக்கும் இனிய “மகளிர் தின நல் வாழ்த்துக்கள்!”

international womens dayஇன்றை மகளிர் தின நாளில் (International Women’s Day) பார் போற்றும் வீரப் பெண்மணி ‘ஜான்சி ராணி’ பற்றிய சுவாரசியத் தகவல்களைக் காண்போம்.

வடமத்திய இந்தியாவின் ஜான்சி நாட்டின் ராணியே “இராணி இலட்சுமிபாய்”. ஜான்சி நாட்டின் இராணி என்பதால் “ஜான்சி ராணி” எனச் சிறப்பாக அழைக்கப்படுகிறார். அடுப்பங்கரையே வாழ்விடம் என்று வாழ்ந்து மறைந்து போன பெண்பணிகளுள், வெள்ளையரை எதிர்த்துப் போராடி வீர மரணத்தை எய்திய இராணி இலட்சுமிபாய் உலகப் பெண்களுக்கு ஓர் எடுத்துக் காட்டு. இந்தியாவில் வாரணாசியில் பிராமண குடும்பத்தில் மௌரிய பந்தர் + பகீரதிபாய் தம்பதிகளுக்கு செல்ல மகளாகப் பிறந்தார் இவர். இவரது இளமைப் பெயர் ‘மணிகர்ணிகா’ என்பதாகும். 1835 நவம்பர் 19 அன்று பிறந்த (1828 எனவும் கூறப்படுகிறது) மணிகர்ணிகா,

திருமணத்தின் பின் ‘இலட்சுமிபாய்’ என அழைக்கப்பட்டார். இவர் பற்றிய இன்னும் சுவாரசியமான தகவல்களைப் பார்ப்போமா?

1. சிறு வயதிலேயே வாள் வீச்சு, குதிரை ஏற்றம் போன்ற போர்கலைகளைக் கற்றுத் தேர்ந்தார் இவர்.

international womens day Jansi Rani
international womens day Jansi Rani

2. 1842 இல் ஜான்சி ராஜா ‘கங்காதர ராவ்’ என்பவருக்கு மணமுடித்து வைக்கப்பட்டார். அன்றிலிருந்து ‘இலட்சுமி பாய்’ என அழைக்கப்பட்டார்.

3. 1851 இல் ஆண் குழந்தை ஒன்று பிறந்து, 4 மாதத்தில் இறந்து போனது .

4. 1853 இல் கணவர் கங்காதர ராவும் இறந்து போனார்.

5. 1854 இல் ஆங்கில அரசாங்கம் ஜான்சிக் கோட்டையை விட்டு வெளியேறும் படி வற்புறுத்த, ஜான்சியின் தலைமைப் பொறுப்பேற்று, “ஜான்சி ராணி” ஆனார் இலட்சுமிபாய்.

6. பிரித்தானிய அரசுக்கு அடிபணிய மறுத்து, தம் படைகளை வழி நடத்தி, பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போர் தொடுத்தர் ஜான்சி.

7. 1858 இல் ‘கோட்டாகி சேராய்’ எனும் இடத்தில் வெள்ளையருக்கு எதிரான போரில் வீர மரணத்தைத் தழுவினார் இராணி.

8. ஆங்கிலேயப் படைத் தளபதி இவர் குறித்துக் கூறுகையில், “வீரத்துக்காகவும் விவேகத்துக்காகவும் விடா முயற்சிக்காகவும் குறிப்பிடத்தக்கவர் எனவும் அனைத்துப் புரட்சித் தலைவர்களிலும் மிகவும் ஆபத்தானவர் இவர்” எனப் புகழாரம் சூட்டுகிறார்.

9. வெள்ளையர் எதிர்ப்புக்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய ‘இந்திய தேசிய படையில்’ பெண்கள் பிரிவுக்கு, “ஜான்சி ராணிப் படை” (Rani of Jhansi Regiment) எனப் பெயரிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Rani of Jhansi Regiment
Rani of Jhansi Regiment

குவாலியர் எனும் இடத்தில் இவர் சமாதி உள்ளதுடன், மகாராஷ்டிரா, ஆக்ரா போன்ற இடங்களில் இவருக்கு சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. ஆக்ராவிலுள்ள ராணி லட்சுமிபாயின் சிலை ஆற்றல், துணிச்சல், நிருவாகத் திறன், வீரம், விடா முயற்சி கொண்டு ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி வீர மரணம் எய்திய வீரப் பெண்மணி இலட்சுமிபாய் இறந்து வாழும் வீரமங்கை.

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்”
– பாரதி –
தொகுப்பு : இளஞ்சைவப் புலவர் . த.கி.ஷர்மிதன்