இந்தோனேஷியா இலங்கைக்கு 5000 மெற்றிக் தொன் அரிசி அன்பளிப்பு

இந்தோனேஷியா இலங்கைக்கு 5000 மெற்றிக் தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்குகிறது.

இது தொடர்பான நிகழ்வு இந்தோனேஷிய ஜனாதிபதி ஜொக்கோ விதோதோ தலைமையில் ஜகார்த்தா நகரில் நேற்று இடம்பெற்றது.

இந்தோனேஷியாவிற்கான இலங்கை தூதுவர் தர்ஷன எம் பெரேரா நிகழ்வில் கலந்து கொண்டார். இலங்கையில் நிலவும் அவசர நிலையை கருத்திற் கொண்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்வைத்த கோரிக்கையை ஏற்று அரிசி வழங்கப்படுவதாக இந்தோனேஷிய ஜனாதிபதி கூறினார்.

இந்த அரிசி தொகை அடுத்த மாதம் கொழும்பை வந்தடையும்.