பாரத தேசத்தின் 69வது குடியரசு தினம் இன்று (26) யாழில் (படங்கள்)

​(யாழ்ப்பாணம்)
India celebrates 69th Republic Day

இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழ். கச்சேரி நல்லூர் வீதியில் உள்ள துணைத்தூதுவரின் “இந்தியன்” இல்லத்தில் இன்று (26) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் குடியரசு தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டு, இந்தியத்துணைத்தூதுவர் ஆறுமுகம் நடராஜன் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்.
ஆதனைத் தொடர்ந்து, இந்திய குடியரசு தலைவர் சிறி ராம்நாத் கோவிந்தின் குடியரசு தின உரையாற்றி வாசித்ததுடன், தனது உரையினையும் ஆற்றியிருந்தார்.

 

 


அதனைத் தொடர்ந்து, இந்தியா அசாம் மாநிலத்தில் இருந்து வருகை தந்த பிகு நடன குழுவினரின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில், மத குருமார்கள் உட்பட இந்திய துணைத் தூதுவரின் துணைவியார் சாந்தி நடராஜன் மற்றும் சிறுவர் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், உள்ளிட்ட இந்திய அதிகாரிகள், இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.