புலம்பெயர்வாளர்களின் சர்வதேச மாநாடு எதிர்வரும் 21ம் திகதி கொழும்பில் ஆரம்பம்

புலம்பெயர்வாளர்களின் சுகாதாரம் தொடர்பான சர்வதேச மாநாடு எதிர்வரும் 21ம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

உலக சுகாதார அமைப்பு, புலம்பெயர்வாளர்களுக்கான சர்வதேச அமைப்பு, சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து இந்த மாநாட்டை ஒழுங்கு செய்துள்ளன.

இந்த மாநாடு இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த மாநாடு 21ம் திகதி முதல் 23ம் திகதி வரை கொழும்பில் நடைபெறும்.

20ற்கும் மேற்பட்ட நாடுகள் இதில் பங்கேற்க உள்ளன. 2 மில்லியனுக்கு மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். இதேபோல் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருடாந்தம் இலங்கைக்கு வருகின்றனர்.

மாநாட்டின் நிறைவில் கொழும்பு பிரகடனம் என்ற பெயரில் ஒரு ஆவணம் பிரகடனப்படுத்தப்பட உள்ளது.