ஆயுதங்களை கைப்பற்றுவதற்கு இன்று முதல் விசேட நடவடிக்கை

சட்டவிரோத ஆயுதங்களை கைப்பற்றுவதற்கு இன்று முதல் விசேட நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

களுத்துறை சிறைச்சாலை வாகனம் மீதான தாக்குதல் மற்றும் கல்கிசை நீதிமன்றத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை தொடர்ந்து இந்த விசேட நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டிருப்பதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர்களான பிரிஜயந்த ஜெயக்கொடி மற்றும் அஜித் றோகண ஆகியோர் தெரிவித்தனர்.

இன்று அரசாங்க தகவல்திணைக்களத்தில ;இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த விடயத்தை குறிப்பிட்டனர். களுத்துறை சிறைச்சாலை தாக்கப்பட்ட பின்னர் நாட்டின் பாதுகாப்பு சீர்குழைந்திருப்பதான குற்றச்சாட்டை இதன் போது அவர்கள் நிராகரித்தனர்.

நாட்டில் சட்டவிரோத நவீன ஆயுதங்கள் இன்னும் இருப்பதையே இந்த சம்பவங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது. இதனால் ஆயுதங்களை கைப்பற்றுவதற்கான நடவடிக்கை தீர்மானிக்கப்பட்டது. இதற்கு ஏனைய பாதுகாப்பு பிரிவினரின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படும்.

சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்.

இது தொடர்பான தகவல்களை 011-2854880 அல்லது 011-2854885 குறித்த தொலைபேசியூடாக வழங்கமுடியும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.