கொழும்பு இந்துக்கல்லூரி அணி வெற்றி

கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் இடையிலான ‘இந்துக்களின் சமர்’ போட்டிகள் நேற்று ஆரம்பமாகின.

இரு பாடசாலைகளுக்கும் இடையிலான உதைபந்தாட்டப் போட்டிகள் நேற்று கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றன.

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் கொழும்பு இந்துக் கல்லூரி அணி ஐந்து கோல்களை அடித்து போட்டியில் வெற்றிபெற்றது. யாழ் இந்துக் கல்லூரி அணி எந்தவித கோல்களையும் பெற்றிருக்கவில்லை.

ஆரம்பமான நேற்றைய நிகழ்வில் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அநுர.டி.சில்வா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்இ பாடசாலை அதிபர் பி.பரமேஸ்வரன் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

இந்துக்களின் சமர் போட்டியில் இன்றையதினம் இரு கல்லூரிகளுக்கும் இடையிலான கிரிக்கெட்போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.