இந்துக்கல்லூரியின் போதைப்பொருள் மற்றும் மதுவற்ற கலாச்சாரம் தொடர்பில் போட்டிகள்

போதைப்பொருள் மற்றும் மதுவற்ற கலாச்சாரம் தொடர்பான போட்டிகள் உள்ளிட்ட மாணவர்களின் நிகழ்ச்சி நிரல் ஒன்று கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியினால் மேற்கொள்ளப்படவுள்ளது.   தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பாடசாலை அதிபர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

ஜனாதிபதி போதைப்பொருள் செயலணியின் விசேட வழிகாட்டிலின் அடிப்படையில் பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியின் அனுசரணையுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக பாடசாலையின் அதிபர் ரி.வி.பரமேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண இந்துக்கல்லூரியும் இதில் பங்குகொள்ள இருப்பதுடன் கொழும்பிலுள்ள 35 பாடசாலைகள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் என்று கல்லூரியின் அதிபர் தெரிவித்தார்.

மார்ச் 2ம் திகதி முதல் 4ம் திகதி வரை இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மாணவர்கள், சிறுவர்களை போதைப்பொருளில் இருந்து மீட்டெடுப்பதே இந்த வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் டொக்டர் பிரன்னவருண் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களின் பங்களிப்புடன் உதைபந்தாட்ட போட்டியொன்றும் கிரிக்கட் போட்டியொன்றும் மற்றும் போதைப்பொருளற்ற விளையாட்டு என்ற தொனிப்பொருளிலான நடைபவனி ஒன்றும் நடத்தப்படவுள்ளது.