சோமாலிய கடற்கொள்ளையர்கள் வசம் சிக்கியுள்ள 8 இலங்கையர்கள்

இலங்கை கொடியுடன் பயணித்த கப்பலொன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

துபாய் அரசுக்கு சொந்தமான எரிஸ் 13 (Aris 13) எனும் இந்த கப்பலில் 8 பேர் அடங்கிய குழு பயணித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தப் கப்பல் சோமாலிய கடற்பகுதியை அண்மித்த வேளை, காணாமல் போயுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படும் கப்பலில் இருந்த எட்டு ஊழியர்களும் இலங்கையர்கள் என நம்புவதாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.