நாளை முதல் மழை

நாளை முதல் நாட்டின் தென்பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேற்கு , சப்ரகமுவ மத்திய மற்றும் தென்மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் கடற்கரையோரங்களிலும் சீரான காலநிலைநிலவும் என்றும் திணைகளம் சுட்டிக்காட்டியுள்ளது.