தர்பூசணியின் மருத்துவ குணங்கள்

Health benefits of water melon

நிரிழிவு நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். இந்த பழத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.

தர்பூசணி பழசாறுடன் இளநீர் கலந்து அருந்த வெயிலால் ஏற்படும் வெம்மை குறையும். உடல் சூடு தணியும்.தர்பூசணிப் பழத்துண்டுகளை பதநீரில் போட்டு, ஒரு துண்டு ஐஸ் கட்டி சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி உடல் குளிர்ச்சி ஏற்படும். வயிற்று வலி தீரும்.health benefits of water melon

பழச்சாறுடன் சிட்டிகை அளவு சீரகப்பொடி, சர்க்கரை சேர்த்து அருந்த நீர்த்தாரை எரிச்சல் நீங்கும்.
health benefits of water melon
தர்பூசணிப் பழசாறுடன் பால் கலந்து அருந்த தொண்டை வலி மறையும். கண்கள் குளிர்ச்சி பெறும்.தர்பூசணிப் பழசாறுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி ஊறிய பின்னர் முகம் கழுவ முகம் பளபளக்கும்.

தர்பூசணிப் பழம் ஜீரணத்தை சீர்படுத்தும். பழத்தை நீங்கலாக இருக்கும் வெள்ளை ப் பகுதியை கூட்டு, குழம்பாக தயாரித்து சாப்பிடலாம் இது குடல் நோய்களை குணப்படுத்தும். health benefits of water melon
health benefits of water melon
தர்பூசணியில் lycopene என்ற polyphenol அதிகம் காணப்படுகிறது. இதய நோய்களிலிருந்தும் புற்று நோய்களிலிருந்தும் நம்மை காக்கிறது.

எத்தனையோ பயன்கள் தர்பூசணியில் இருந்தாலும் முக்கியமாக ரத்த அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

தர்பூசணி அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இதில் இருக்கும் கார்போஹைட்ரேட், சர்க்கரை, புரதம், புரோட்டீன், தையமின், ரிபோபிளேவின், கல்சியம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி ஒரு மாத்திரையை ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ளனர்.health benefits of water melon

health benefits of water melon
தர்பூசணி மாத்திரை சாப்பிட்டவர்களின் ரத்த அழுத்தம் படிப்படியாக குறைந்து சீரான நிலையை அடைந்திருந்தது. தர்பூசணியில் இருக்கும் பொருட்கள் ரத்த தட்டுகளை அகலப்படுத்துகிறது.

இதனால் உடல் முழுவதும் ரத்தத்தை பம்ப் செய்து அனுப்ப வேண்டிய இதயத்தின் வேலை சுலபமாகிறது.வேலை குறைவதால் இதயம் வலுவடைகிறது. எனவே இதயம் நீண்ட காலம் சிறப்பாக இயங்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

வெயில் சூடு தணிக்க மட்டுமல்லாது இதன் மருத்துவ குணங்களை கருத்திற் கொண்டு இப்பழத்தை தொடர்ந்து உண்டால் ஆரோக்கிய வாழ்வை நாமும் பெறலாம்.

 

 

 

 

 

 

லாம்.