கடுகு பற்றி நீங்கள் அறியாத அற்புதமான மருத்துவ குணங்கள் (Health benefits of Mustard Seed)

Health benefits of Mustard Seed

கீழைத்தேய வாசனை திரவியங்கள் புகழ் பெற்றவை. உணவுக்கு சுவை சேர்ப்பது மட்டுமன்றி, பல உடற்கோளாறுகளுக்கு கை மருந்தாக பயனளிப்பவை.நம் சமையலில் மிக முக்கியமான பொருள் கடுகு. கடுகு சிறியதானாலும், உணவிற்கு அது ஊட்டும் மணம், சுவை பெரிது கடுகில் மூன்று வகை உண்டு.
சிறிய செங்கடுகு (கருங்கடுகு), பெரிய செங்கடுகு, வெண் கடுகு.
கடுகில்லாமல் நமது சாம்பார், ரசம், களிஇவை முழுமையான சுவையை பெறாது. பெரும்பாலான உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படுவது கடுகு.
உடல் ஆரோக்கியம் காப்பதிலும் பருமனை குறைப்பதிலும் கடுகு பெரும் பங்கு வகிக்கிறது.health benefits of Mustard seed
கடுகு செடியில் உள்ள ஹோமோபிராசினோலைட் என்ற மூலப்பொருள் தசைகளுக்கு வலு சேர்ப்பதுடன் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கிறது.
பசியை தூண்டி செரிமானத்துக்கு உதவுகிறது. முக்கியமாக மூப்படையும் வயதில் தசைகள் அதிகம் சேதமடையாமல் பாதுகாப்பு அளிக்கிறது.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. உடலில் புரதத்தின் அளவை சீராக வைக்கிறது.
 health benefits of Mustard seed
கடுகை நன்கு அரைத்து பொடியாக்கி அதனுடன் மிளகு பொடி, உப்பு சேர்த்து காலையில் ஒரு ஸ்பூன், அளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி அஜீரணக் கோளாறைப் போக்கும், மேலும் இதனை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பித்தம், கபம், மற்றும் ஆஸ்த்துமாவையும் குணமாக்கும்.
விஷம் சாப்பிட்டவர்களுக்கு முதலில் கடுகை அரைத்து நீரில் கலந்து கொடுத்தால் உடனே வாந்தி உண்டாகும் அந்த வாந்தியுடன் உள்ளிருக்கும் நஞ்சானது வெளியேறும்.
பூச்சி மருந்து, தூக்க மாத்திரை போன்றவற்றை சாப்பிட்டவர்களுக்கு, 2 கிராம் கடுகு நீர் விட்டு அைத்து நீரில் கலக்கி உட்கொள்ளக் கொடுத்தால் உடனடியாக வாந்தி எடுக்க விஷம் வெளியேறும்.
கடுகுப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இந்த இருமல் நீங்குவதுடன் தலைவலியுடன் உண்டாகும். இருமல், மூக்கில் நீர் வடிதல், அதிக உமிழ்நீர் சுரத்தல், சிறுநீர் பிரிவதில் பிரச்சனை போன்றவை குறையும்.
அஜீரணக் கோளாறால் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றில் வலியை உண்டாக்கும். இந்த வயிற்று வலி நீங்க கடுகை பொடி செய்து வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும்.
கடுகுத்தூளை நீரில் குழைத்து இருமல், இரைப்பு இருப்பவர்கள் மார்பு, தொண்டைப் பகுதிகளில் தடவி வந்தால் நாளடைவில் இருமல் நீங்கும்.
கை,கால்கள் சில்லிட்டு விரைத்துக் காணப்பட்டால் கடுகை அரைத்து துணியில்தடவி கை, கால்களில் சுற்றி வைக்க வெப்பத்தை உண்டாக்கும் உடனடியாக விரைப்பு சீராகும்.
கடுகெண்ணை மூட்டுவலிக்கு நல்ல மருந்து. சூடாக்கி பாதிக்கப்பட்ட மூட்டுக்களில் தடவி ஒத்தடம் கொடுக்க வலி குறையும்.Health benefits of Mustard Seed
கடுகை அரைத்து முட்டிவலி மற்றும் ரத்தக்கட்டியின் மீதும், தலைவலி உள்ளவர்கள் நெற்றியில் பற்றுப் போட்டால் வலி நீங்கும்.
கடுகு எண்ணெயை குழந்தைகள் முதல் பெரியவர் வரை, உடலில் பூசி ஊரவைத்து குளிப்பது சருமத்திற்கு வனப்பளிக்கின்றது, மேலும் தலை முடி கொட்டுவதையும் தடுக்கிறது.
கடுகினை பச்சையாக சேர்த்து அரைத்த உணவுப் பொருட்கள் வயிற்றில் வேக்காளத்தை உண்டாக்கும். கடுகுக் கீரை ஜீரணத்தை பாதிக்கும். அதனால் காலநிலைக்கு ஏற்றவாறு உபயோகிக்க வேண்டும்.
இதனால், உடல் ஆரோக்கியம் அதிகரித்து சுறுசுறுப்பான செயல்பாடுகளுக்கு உதவுகிறது. உணவில் கடுகை தினமும் சேர்த்துக் கொண்டால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
  (Health benefits of Mustard Seed)