பிரான்ஸ் நாட்டு ஜோடிக்கு மறியல்

காலி புகையிரத நிலையத்துக்குள் அனுமதியின்றி நுழைந்து, ரயில் பெட்டிகளில் சித்திரம் வரைந்த பிரான்ஸ் நாட்டு ஜோடியை – French couple, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு, காலி பிரதான நீதவான், சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். french couple

இவ்வாறு பெட்டிகளில் வரைந்ததன் காரணத்தினால், ரயில்வே திணைக்களத்துக்கு 64,440 ‌ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக, நீதவானிடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு ரயில் பெட்டிகளில் வரையப்பட்ட சித்திரங்களை அழிக்க முடியாது என்றும் சித்திரம் வரையப்பட்ட பெட்டிகளுக்கு முற்றாக வர்ணப்பூச்சு பூச வேண்டும் என்றும் ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.