தப்பிச்சென்ற 563 பேர் கைது

கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி சட்டரீதியாக விலகிச்செல்லாத முப்படை வீரர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் இலங்கை காவல்துறை மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் பிரிவினர் ஒன்றிணைந்து நாடு முழுவதும் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இதுவரை 563 முப்படைவீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தகவல் பிரிவு தெரிவித்துள்ளது.

அனுமதியின்றி நீண்டகால விடுமுறையிலிருந்து கடமைக்கு சமூகமளிக்காத முப்படை வீரர்களுக்கு சட்டரீதியாக கடமையிலிருந்து விலகுவதற்காக கடந்த ஆண்டு இரு முறைகள் பொதுமன்னிப்புக்காலம் அறிவிக்கப்பட்டு கால அவகாசம் வழங்கப்பட்டது.

மேலும் கடந்தவருடம் டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் உள்ளிட்ட ஒன்பதாயிரம் பேர் சட்டரீதியாக விலகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.