கஞ்சாவுடன் ஐவர் கைது

பருத்தித்துறை கடற்பரப்பில் 158 கிலோகிராம் கஞ்சாவுடன், 5 பேரை வியாழக்கிழமை (23) கைது செய்துள்ளதாக பருத்தித்துறை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களை விசாரணைகளின் பின் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.