அவசர தொலை பேசி இலக்கம்

அரிசி விற்பனையில் முறைக்கேடுகளில் ஈடுபடும் வர்த்தகளுக்கு எதிராக கடும்நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இத்தகைய வர்த்தகர்கள் தொடர்பில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 1977 என்ற இலக்கத்தை கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இன்று அறிமுகப்படுத்தினார்.

அரிசியை பதுக்கி வைத்தல் மற்றும் அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலைக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட மோசடிகள் குறித்து, பொது மக்களால் இந்த தொலைபேசி இலகத்தின் ஊடாக தகவல் வழங்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மோசடிகாரர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த 17ம் திகதி வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அரிசிக்கான அதிக பட்ச சில்லறை விலை குறித்த விபரம் பின்வருமாறு:

இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி ஒரு கிலோ 72 ரூபா

தேசிய நாட்டரிசி ஒரு கிலோ 80 ரூபா

இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை பச்சரிசி ஒரு கிலோ 70 ரூபா

நாட்டு வெள்ளை பச்சரிசி (கெகுளு) ஒரு கிலோ 78 ரூபா

இறக்குமதி செய்யப்பட்ட சம்பா ஒரு கிலோ 80 ரூபா