உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, 53 இலட்சம் கையெழுத்துகளைத் திரட்டும் திட்டம்

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, 53 இலட்சம் கையெழுத்துகளைத் திரட்டும் நடவடிக்கையொன்று, எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதி முதல் முன்னெடுக்கவுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும தெரிவித்தார்.

பொரளை என்.எம்​.பெரேரா கேந்திர நிலையத்தில், நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“எதிர்வரும் மார்ச் மாதம் 19ஆம் திகதியுடன், உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தி ஆறு வருடங்கள் பூர்த்தியாகின்றன” என்றும் அவர் நினைவுபடுத்தினார்.