வைத்தியர்களின் வேலை நிறுத்தம்

  • மேல் மாகாண வைத்தியசாலைகளில் அரச வைத்திய அதிகாரிகள் இன்று காலை ஆரம்பித்​த வேலை நிறுத்தப் போராட்டம் நாளை காலை 08 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மாலபே தனியார் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாகாண மட்டங்களிலான அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

வைத்தியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பல நோயாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.