தினேஸ் குணவர்தனவுக்கு ஒருவாரகால தடை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன, ஒரு வாரங்களுக்கு சபை அமர்வுகளில் கலந்து கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தினேஸ் குணவர்தனவை பாராளுமன்ற சபை நடவடிக்கையிலிருந்து வெளியேற்றுவதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 85 பேரும் எதிராக 22 பேரும் வாக்களித்ததோடு 114 பேர் சமூகமளிக்கவில்லை.

இதேவேளை மக்கள் விடுதலை முன்னணியின் வாக்கெடுப்பில் பங்குபெறவில்லை.

இதனையடுத்து தினேஷ் குணவர்தன பாராளுமன்ற சபை நடவடிக்கைகளில் பங்கேற்க ஒரு வாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.