டெங்கு நோயினால் 24 பேர் உயிரிழப்பு

இவ்வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் சுமார் 16 ஆயிரத்து 500 டெங்கு நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24 பேர் மரணத்தை தழுவியுள்ளார்கள்.

இதே வேளை டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை சோதனையிடுவதற்காக சுகாதார அமைச்சு 500 உதவியாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது.

மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவர்களுக்குரிய நியமனக் கடிதங்களை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தில் நேற்று வழங்கினார்.

கொழும்புஇ கம்பஹாஇ களுத்துறைஇ காலிஇ யாழ்ப்பாணம்இ திருகோணமலை இ இரத்தினபுரி மாவட்டங்களில் கூடுதலான டெங்கு நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளார்கள்.

இதன் காரணமாக தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டம் அமுலாகிறது. ஏதிர்வரும் 29 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை நாடு தழுவிய ரீதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.