120 பாடசா​லைகளில் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம்

பெப்ரவரி மாதத்தில் முதல் வாரத்தில், கொழும்பு மாவட்டத்துக்குட்பட்ட 102 பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பரவுக்கூடிய அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. (Dengue threat in Sri Lanka)

குறித்த பாடசாலைகளின் 44 பாடசாலைகளில் டெங்கு நுளம்பின் முட்டைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.

2017 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து இன்று வரை நாடு முழுவதிலும் 9,886 டெங்கு நோயளர்கள் இனங்கானப்பட்டுள்ளதாகவும் இதில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நொயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கொழும்பில் மாத்திரம் ஜனவரி மாதத்தில் 2,628 ​பேரும் பெப்ரவரி மாத்தில் 148 டெங்கு நேயாளர் இனங்கானப்பட்டுள்ளனர். மொத்தமாக ஜனவரி மாத்தில் 9,545 பேரும் பெப்ரவரி மாத்தில் 341 பேரும் இனங்கானப்பட்டுள்ளனர்.