சமூகத்தை உருவாக்கும் பொறுப்பு பெண்களிடம் உள்ளது – திருமதி சந்திராணி பண்டார

நாட்டில் பெருமையுடன் கூடிய சமூகத்தை உருவாக்கும் பொறுப்பு எம்மிடம் இருப்பதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் திருமதி சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பெண்களிடம் இருக்கும் பலமும் ஊக்கமும் நீடித்து நிலைக்க வேண்டியிருப்பதால் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இன்றைய தினத்தில் அவர்களுக்கு மதிப்பளிக்கப்படுகின்றது என்று மேலும் குறிப்பிட்டார்.