கமல்ஹாசன் அண்ணன் சந்திரஹாசன் மரணம்,

கமல்ஹாசன் அண்ணன் சந்திரஹாசன்(Chandra Haasan) மரணம்,

நடிகர் சங்கம் இரங்கல் செய்தி – 19.3.17

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலர் நடிகர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களது ரெண்டாவது சகோதரர் திரு.சந்திரஹாசன் அவர்கள் லண்டனிலுள்ள அவரது மகள் அனுஹாசனின் இல்லத்தில் நேற்று இரவு காலமானார் என்பதை அறிந்து வேதனையடைந்தோம். பால்யகாலம் முதல் திரு கமலஹாசன் அவர்களுக்கு வழிகாட்டியாக, உறுதுணையாக, அவரது வளர்ச்சிக்கு காரணமாக இருந்து வந்தவர் திரு.சந்திரஹாசன். எனவே தான் அவரை தனது மூத்த சகோதரர் என்றியில்லாமல் அப்பா என்றே எப்போதும் குறிப்பிடுவார். அப்பேர்ப்பட்ட அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறோம். அவரது இழப்பால் துக்கத்தில் வாடும் திரு.கமலஹாசன்,முத்த சகோதரர் நடிகர் திரு.சாருஹாசன் மற்றும் அவர்களது குடும்பத்தார் அனைவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களது ஆழுந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளுகிறது.

Chandra Haasan
Kamal Haasan’s elder brother Chandra Haasan

– தென்னிந்திய நடிகர் சங்கம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]