மதுரங்குலி: பஸ் கவிழ்ந்து ஐவர் பலி 30 பேர் காயம்

இன்று காலை 10 மணியளவில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பஸ் மதுரங்குலியவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஐந்து பயணிகள் கொல்லப்பட்டதோடு 28 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று சக்கர வாகனத்தை முந்த முயற்சிக்கும் போது விபத்து ஏற்பட்டது.

காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.