பாரதிதாசன் (Bharathidasan) படைப்புக்களில் பெண்களின் நிலை

Bharathidasan
Bharathidasan

முன்னுரை:

ஒரு மனிதன் வாழவேண்டுமென்றால் அவனுக்கு முதலில் அன்னையாகவும் துணைவியாகவும், குழந்தையாகவும் ஒரு பெண் உருவெடுக்கிறாள். அப்படிப்பட்ட அந்தப் பெண்ணின் சிறப்புகளையும் பெருமைகளையும் எடுத்தியம்புவனாக இருக்கும் பாரதிதாசன் (Bharathidasan) படைப்புக்களை ஆராய்வதே இதன் நோக்கமாகும்.

2.பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்கள்:

அன்றாட வாழ்வில் பெண்கள் படும் துன்பங்கள் எண்ணற்றவை. அவைகளை பாரதிதாசன் நமக்கு படம் பிடித்துக் காட்டியுள்ளார் அவரின் கவிதைகள் மூலம் புரட்சிக்கவியில் அமுதவல்லியாக இருக்கும் அரசன் மகள் படும் துன்பம் மிக அதிகம் இதனை

‘பானல்விழி மங்கையிடம் ‘உதார னுக்குப்
பார்வையில்லை குருட ‘னென்று சொல்லிவைக்க!
ஞானமுறும் உதாரனிடம் ‘அமுத வல்லி
நலிகுட்ட ரோகி’ என எச்சரிக்க!.’

(புரட்சிக்கவி-32- 35)

என்று அமைச்சன் அரசனுக்கு அறிவுரை வழங்கினான் அரசனும் அதனை ஏற்றுக்கொண்டு அமுதவல்லிக்கும் உதாரனனுக்கும் துரோகம் இழைத்தான்

3.கைம்மை பெண்களின் அவல நிலை:

இக்காலத்தில் கணவனை இழந்தப் பெண்களை விதவைஇ தாலி அறுத்தவள்ரூபவ் முண்டச்சிஇ என்றுக் கீழ்த்தரமாக கூறுகின்றனர். ஆனால்இ பாரதிதாசன் கைம்மை பெண் என்று சிறப்புப்பெயர் இட்டு அவர்களுக்கு தனது கவிதைகளில் முன்னுரிமை அளித்திருக்கிறார.;

‘தன்கண வன்செத்து விட்டபின் மாது
தலையிற்கைம் மைஎன ஓர்-பெருந்
துன்பச் சுமைதனைத் தூக்கிவைத் தார்:
பின்பு துணைதேட வேண்டாம் என்றார்’

(பெண்ணுலகு- கைம்மைப் பழி)

தன் கணவன் இறந்தபின்பு மங்கையானவள் கைம்மை எனும் சுமையை தாங்கிக்கொண்டு பின்னர் வேறு ஆடவனை மணம் செய்ய வேண்டாம் என்றுக் கூறினார்கள.

‘கைம்மை எனக்கூறி – அப்பெறும்
கையினிற் கூர்வேலால்
நம்மினப் பெண்குலத்தின் – இதய
நடுவிற் பாய்ச்சுகின்றோம்’

(பெண்ணுலகு-கைம்மைக் கொடுமை)

கைம்மை என்றுக்கூறி கூர்மையான வேலால் நம்முடைய பெண் வர்க்கத்தின் இதய நடுவில் வீசுகின்றோம்.

4.பெண்களின் முன்னேற்றத்தில் சிறப்பு

பெண்களுக்கு சம உரிமை வேண்டுமஇ; பெண்கள் முன்னேற்றமே சிறந்ததுஇ பாரதிதாசன் கவிதைகளில் பெண்கள் முன்னேற்றம் குறித்து மிக நேர்த்தியாக உணர்த்தப்பட்டுள்ளது.

‘ஆடை அணிகலன்கள் ஆசைக்கு வாசமலர்
தேடுவதும் ஆடவர்க்குச் சேவித் திருப்பதுவும்
அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப்போல் வாழுவதும்
கெஞ்சுவது மாகக் கிடக்கும் மகளிர்குலம்
மானிடர் கூட்டத்தில் வலிவற்ற ஓர்பகுதி!’

(வீரத்தாய் – காட்சி:1)

ஆடைகள் அணிகலன்கள் மலர்கள்ரூபவ் இவையெல்லாவற்றையும் தேடுவதும் பயப்படுதலும்; வெட்கப்படுதலும்; ஆமையைப்போல ஒடுங்கி வாழும் பெண்கள் சக்தியற்றவர்கள் என்று பாரதிதாசன் குறிப்பிடுகிறார் .

‘மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்’

(குறள் – 52)

5.பெண் கல்வியின் அவசியம்

ஒரு ஆண் கல்விக் கற்றால் அவனுக்கு மட்டும் தான் பெருமை. ஆனால் ஒரு பெண் கல்விக் கற்றால் அந்தக் குடும்பத்திற்கேப் பெருமை. பாரதிதாசனும் பெண்கள் கல்விக் கற்க

வேண்டுமென்பதை தனதுக் கவிதைகளில் புகுத்திருக்கிறார.;

பெண்கட்குக் கல்வி வேண்டும்

குடித்தனம் பேணுதற்கே!

பெண்கட்குக் கல்வி வேண்டும்

மக்களைப் பேணுதற்கே!

பெண்கட்குக் கல்வி வேண்டும்

உலகினைப் பேணுதற்கே!

பெண்கட்குக் கல்வி வேண்டும்

கல்வியைப் பேணுதற்கே!

(குடும்பவிளக்கு – விருந்தோம்பல்)

ஒரு பெண் சமுதாயத்தில் நிலைத்து வாழ வேண்டுமென்றால் அவளுக்கு கல்வி தான் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. இதைத்தான் பாரதிதாசனும் இக்கவிதையின் மூலம் வலியுறுத்திருக்கிறார்.

கல்வியில் லாத பெண்கள்

களர் நிலம்: அந்நிலத்தில்

புல் விளைந்திடலாம்: நல்ல

புதல்வர்கள் விளைதல் இல்லை!

(குடும்பவிளக்கு – விருந்தோம்பல்)

கல்விக் கற்காத பெண்கள் பயிர் செய்ய இயலாத விளைநிலம் போல அதில் புட்கள் மட்டுமே நிறைந்திருக்கும். என்று பாரதிதாசன் சுட்டிக் காட்டிருக்கிறார்.

6.புரட்சிப் பெண்கள்

போராடும் குணமும் எதையும் தாங்கும் மன தைரியமும் சமுதாயத்தில் மற்ற ஆண்களோடு போட்டி போடும் திறனும் பெண்களிடத்தில் மிகுந்திருக்க வேண்டும். ஒரு பெண் ஆடவனிடம் சிக்கிக்கொண்ட போது உயிரைவிட தன் மானமே பெரிது என்றுக்கருதி அவனிடம் போராடுகிறாள். இந்நிகழ்வு பாவேந்தரின் ‘தமிழச்சியின் கத்தி’ எனும் காவியத்தில் காணமுடிகிறது.

‘நீ என்னை வாட்டினும்

கையைத் தொடாதேயடா-இந்த

முத்தமிழ் நாட்டுக்கு மானம் பெரிதன்றி

மூச்சுப் பெரிதில்லை காண்’

(தமிழச்சியின் கத்தி-20)

திருக்குறளில் ஒரு தாய் தன் மகனை சான்றோன் எனக் கேட்டவுடன் ஆனந்தத்தில் மூழ்கிறாள்.

‘ரூடவ்ன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்’

(குறள்-69)

குதிரை கனைப்பதற்கு தடைகள் இல்லை. அது கட்டிருக்கும் இடத்தில் ஆனால் மகளிராகப் பிறந்தால் வீடுகளில் பேசுவதற்கும் தடை பெண்ணென்றால் பேசா மடந்தையா? இல்லை அவளுக்குள்ளும் புரட்ச்சியாய் வெடிக்கும் புதுமை பெண் ஒளிந்திருக்கிறாள் என பாரதிதாசன் ‘பெண்ணுலகு’ எனும் தொகுப்பில் ‘பெண்ணுக்கு நீதி’ எனும் தலைப்பில் உணர்த்திருக்கிறார்.

‘தனித்துக் கிடந்திடும் லாயம் – அதில்

தள்ளியடைக்கப் படுங்குதிரைக்கும்

கனைத்திட உத்தர வுண்டு – வீட்டில்

காரிகை நாணவும் அஞ்சவும் வேண்டும்’

(பெண்ணுலகு – பெண்ணுக்கு நீதி)

7.குழந்தைத் திருமணத்தால் பெண்கள் படும் துன்பம்:

அன்றுமுதல் இன்றுவரை பெண் சிசுக்கொலை இருந்து வருகிறது. அறியாத வயது புரியாத பருவம் எனும் சூழ்நிலையில் திருமணத்திற்கு பெண்குழந்தைகளை உட்படுத்துகின்றனர் சில ஆன்றோர்கள். குழந்தைத்திருமணத்தை முழுவதுமாக எதிர்த்தவர் என்றப் பெருமை பாவேந்தரையேச் சாரும். பாவேந்தர் ‘பெண்ணுலகு’ எனும் தொகுப்பில் குழந்தை மணத்தின் கொடுமை எனும்

தலைப்பில் குழந்தைத் திருமணத்தை வெகுவாக கண்டித்திருக்கிறார்.

ஏழு வயதே எழிற்கருங் கண் மலர்

ஒருதா மரைமுகம்! ஒருசிறு மணியிடை!

சுவைத் தறியாத சுவைதருங் கனிவாய்!

இவற்றை யுடைய இளம்பெண் – அவள்தான்

கூவத்தெரியாக் குயிலின் குஞ்சு’

(பெண்ணுலகு – குழந்தை மணத்தின் கொடுமை)

8.முடிவுரை:

பெண்களின் வளர்ச்சிக்கும்இ முன்னேற்றத்திற்கும்இ அடிப்படை ஆதாரமாக அவர்களின் கல்வி தான் விளங்குகிறது. அவர்களின் வளர்ச்சிக்கு தடையாக அமைவது முயற்சியின்மையேக் காரணமாகும்.

‘மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’

-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

இவ்வுலகில் பெண்ணாகப் பிறப்பதற்கு தவம் செய்ய வேண்டும் என்று கவிமணி கூறுகிறார். கைம்மைப் பெண்இ கல்விஇ புரட்சிஇ முன்னேற்றம்இ இவைகளில் பெண்களுக்காக தனது கவிதை வில்லை சமுதாயத்தில் ஏவியிருக்கிறார் புரட்சிக்கவி. இதனையே இக்கட்டுரை மெய்ப்பிக்கின்றது.


ஆக்கம்
P.Manikandan, Research Scholar, center for Bharathidasan studies, Bharathidasan University, Trichy. – 24