அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளரது வீட்டின்மீது கல்வீச்சுத்தாக்குதல்

மட்டகக்ளப்பு – ஏறாவூர் – மீராகேணி பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளரது வீட்டின்மீது கல்வீச்சுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இன்று (13) சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ள இத்தாக்குதலில் வேட்பாளரின் வீட்டு கதவு மற்றும் யன்னல் என்பன சேதமடைந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

batticaloa-violence

எம்எஸ். முறீஸ் என்ற இந்த வேட்பாளர் தனது குடும்ப உறவினர்களுடன் வீட்டில் உறக்கத்திலிருந்தவேளை கல்வீச்சு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வேட்பாளர் ஏறாவூர்ப் பற்று பிரதேச சபைக்காக போட்டியிடுகின்றார்.

உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் ஏறாவூர்ப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள முதலாவது தேர்தல் வன்முறைச் சம்பவமாக இது பதிவாகிறது.

ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரனைகளை மேற்கோண்டுவருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]