தனியார் வங்கி ATMஇல் கொள்ளை

தனியார் வங்கி ஒன்றின் தன்னியக்க இயந்திரத்தில் இருந்ததாக கூறப்படும் 40 இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய நீர்கொழும்பு பொலிஸார் விசாரரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நீர்கொழும்பு பகுதியில் உள்ள, வங்கியின் அதிகாரிகள் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணத்தை வைக்க சென்ற போது, இயந்திரத்தில் இருந்த பணம் குறைந்திருப்பதை கண்டு அது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த 30ஆம் திகதி அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

அதிகாலை 2.47 மணிக்கும் 3 மணிக்கும் இடையில் ஏ.டி.எம். இயந்திரத்தின் பாதுகாப்பு கதவை சூட்சுமான முறையில் திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]