ஜெயாவுக்கு அளித்த சிகிச்சை:Apollo விளக்கம்?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த ஆண்டு செப்டெம்பர் 22 ஆம் தேதி அப்போலோ(Apollo Hospital ) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டது.

Apollo hospital

இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் பதிலளிக்க வேண்டும் என பலதரப்பினரும் கோரிக்கை வைத்த நிலையில், அப்போலோ நிர்வாகம் இதுவரை மௌனம் காத்து வந்தது. இது இவ்வாறு இருக்க, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இன்று விளக்கமளிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அப்போலோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்திப்பார் என்றும், அப்போது, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அவர் விளக்கி கூறுவார் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. அப்போது லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவும், ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என விளக்கி கூறுவார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.