அமலா பாலுக்கு பாலியல் தொல்லை – போலீசில் புகார்

Amala Paul police complain

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலா பால் இன்று மாலை சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் தன்னை ஆபாசமாக பேசினார் என கூறியுள்ளார்.


இந்த புகார் மீது உடனே நடவடிக்கை எடுத்த போலீசார் தொழிலதிபர் அழகேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் நடனப்பள்ளி நடத்திவருகிறார் அழகேசன். அந்த நடனப்பள்ளிக்கு ரிகர்சலுக்காக அமலா பால் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அழகேசன் அமலா பாலிடம் ஆபாசமாக பேசியுள்ளார். அதனால் தான் அமலா பால் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தன் ஆசைக்கு இணங்கும்படி அழகேசன் கேட்டதால் தான் அமலா பால் கோபமாகி போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.Amala Paul police complain (1)