உயர்தரப்பரீட்சையில் தேசிய ரீதியில் அதி உயர் சித்தி பெற்று மாகாணத்திற்குப் பெருமை சேர்த்த 35 மாணவர்கள்

AL exams – 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொது தராதர உயர்தரப்பரீட்சையில் தேசிய ரீதியில் அதி உயர் சித்தி பெற்று மாகாணத்திற்குப் பெருமை சேர்த்த 35 மாணவர்கள்; வடமாகாண கல்வி அமைச்சினால் கௌரவிக்கப்பட்டனர்.al-exams

வடமாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில், கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில், இன்று (03.) மாலை இடம்பெற்றது.

வுடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோர் மாணவர்களுக்கான விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.

2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சையில் இம்முறை யாழ்.மாவட்டத்தில் உள்ள பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவர் சிறிதரன் துவாரகன் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று வடமாகாணத்திற்கே பெருமை சேர்த்துள்ளர். இந்த மாணவன் உட்பட பல மாணர்கள் தேசிய ரீதியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்ததை இட்டு, மாணர்வர்களை பாராட்டும் வகையில், மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]