பெயரையோ, புகைப்படத்தையோ அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது – அஜித்குமாரின் வழக்கறிஞர்

Ajith angry

சென்னை: சமூக வலைத்தளங்களில் தனது பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு நடிகர் அஜித் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தனது பெயரால் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் என்றும் அஜித் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, நடிகர் அஜித்குமாரின் சட்ட ஆலோசகரான பரத் என்ற வழக்கறிஞர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அஜித் குமார் எந்த அரசியல் இயக்கத்தையும் சாராதவர் என்றும், அவருடைய ஜனநாயக சிந்தனையை ரசிகர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் எப்போது அவர் திணித்ததில்லை என்றும் கூறியுள்ளார்.

அஜித்துக்கு பேஸ்புக், டிவிட்டர், ஸ்நாப்சாட் அல்லது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் கணக்கு இல்லை என்றும், அதுபோன்ற பெயர்களில் செயல்படும் கணக்குகள் போலியானவை என்றும், அப்படி அஜித் பெயரை தவறாக பயன்படுத்துவோர் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும், பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள், திரையுலகை சேர்ந்தவர்கள் என யாருடைய மனதாவது இதுபோன்ற நபர்களால் புண்பட்டிருந்தால் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெயரையோ, புகைப்படத்தையோ அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது – அஜித்குமாரின் (Ajith ) வழக்கறிஞர்