வெளிநாட்டு தொழில்களுக்காக பயிற்சி பெறுவோருக்கு எயிட்ஸ் மற்றும் பால்வினை நோய்களை கட்டுப்படுத்தும் தேசிய திட்டம்

எயிட்ஸ் மற்றும் பால்வினை நோய்களை கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்துடன் இணைந்த வெளிநாட்டு தொழில்களுக்காக பயிற்சி பெறுவோரை இலக்காகக்கொண்டு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும், சுகாதார அமைச்சும் இணைந்து நடைமுறைப்படுத்துகின்றன. புலம்பெயர் தொழிலாளர்களின் தரத்தையும், சுகாதார ஆரோக்கியத்தை மேம்படுத்துவது திட்டத்தின் நோக்கமாகும்.

இதற்குரிய முதலாவது நடவடிக்கை பணியகத்தின் அலுவலகத்தில் இடம்பெற்றது. எதிர்காலத்தில் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் செறிந்து வாழும் இடங்களில் நலன்புரி வேலைத்திட்டத்தின் கீழான நடமாடும் சேவைகளை நடத்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.