96 வயது பாட்டி தேர்வில் 100 வீத புள்ளிகள் பெற்று சாதனை

இந்தியா கேரளாவை சேர்ந்த பாட்டி தேர்வில் 100 வீத புள்ளிகள் பெற்று சாதித்துள்ளார்.

கேரளா- ஆலாப்புழாவைச் சேர்ந்தவர் கார்த்தியாயினி பாட்டி. இவருக்கு 96 வயது. சிறுவயதில் கல்வி கற்க முடியாததால் தற்போது கேரள மாநிலம் எழுத்தறிவு இயக்கத்தினரால் நடத்தப்பட்ட தேர்வுகளில் எழுத்துத் தேர்வில் 98 சதவீதமும் வாசிப்பு தேர்வில் 100 சதவீதமும் பெற்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கும் விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கார்த்தியாயினி பாட்டிக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கவுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]