’96’ ரீமேக் திரைப்படத்தில் திரிஷாவிற்கு பதிலாக இவரா?

’96’ ரீமேக் திரைப்படத்தில் திரிஷாவிற்கு பதிலாக இவரா?  

சமீபத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்றிருக்கும் திரைப்படம் ’96’

காதல் கதையை மையமாக கொண்டு உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தை தெலுங்கில் நானி வாங்கி நடிக்க இருப்பதோடு, இதில் திரிஷாவின் வேடத்துக்கு சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் சிம்பு, திரிஷா நடிப்பில் கௌதம்மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தெலுங்கில் இதே படத்தை நானி-சமந்தா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கினார்.

காதல் படமான இதில் திரிஷாவுக்கும் சமந்தாவுக்கும் யார் சிறப்பான முறையில் ஜெஸ்சி வேடத்தை கொண்டு வருவது என போட்டியே நடந்த நிலையில், மீண்டும் இதேபோன்ற போட்டி உருவாகி உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

'96' ரீமேக் திரைப்படத்தில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]