முகப்பு Cinema ’96’ படத்தின் இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் திகதி அறிவிப்பு

’96’ படத்தின் இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் திகதி அறிவிப்பு

’96’ படத்தின் இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளரான சி.பிரேம்குமார் இயக்குநராக அறிமுகமாகும் ’96’ படத்தில் விஜய் சேதுபதி – திரிஷா இணைந்து நடித்துள்ளனர்.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ள இப்படத்திற்கு சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார்.

மேலும் ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் எதிர்வருகிற ஆகஸ்ட் 24-ஆம் திகதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

காதலை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 16, 36, 96 வயதுள்ள 3 கெட்-அப்களில் நடித்திருக்கிறார். சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

கோவிந்த் மேனன் இசையில் சமீபத்தில் வெளியாகிய ‘காதலே காதலே’ பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com