928 கிலோகிராம் கொக்கெய்ன் அழிப்பு

கொக்கெய்ன்

928 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்​பொருள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னிலையில் இன்று காலை அழிக்கப்பட்டது.

கொழும்பு பிரதம நீதவான் லால்​ரணசிங்க பண்டாரவின் மேற்பார்வையின் கீழ் கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு சபை வளாகத்தில் இந்த கொக்கெய்ன் தொகை அழிக்கப்பட்டது.

கெய்ன் தொகை அங்கு நீரில் கரைக்கப்பட்டு பின்னர் புத்தளம் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டு முற்றாக அழிக்கப்படவுள்ளது.

கொக்கேய்ன் தொகை அழிக்கப்படுவதை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள் சிலரும் அங்கு சென்றிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]