9 பேரை அடையாள அணிவகுப்புக்கு உள்ளாக்க உத்தரவு

மிரிஸ்ஸ பிரதேசத்தில் வெளிநாட்டவர்கள் மீது தாக்கல் நடத்தியதுடன், பெண் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 9 சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

மாத்தறை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 26ஆம் திகதி குறித்த சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

அத்துடன், அதுவரை குறித்த சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் நீPதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 8ஆம் திகதி அதிகாலை வேளையில் வெலிகம், மிரிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய 13ஆம் திகதி 6 பேர் கைதுசெய்யப்பட்டதுடன் மறுநாள் காலை மாத்தறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அதன்போது சந்தேக நபர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், மேலும் மூன்று சந்தேக நபர்களை நேற்று முன்தினம் வெலிகம பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

இதேவேளை, வெலிகம பகுதியில் கடந்த 15ஆம் திகதி இருதரப்புக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, இஸ்ரேல் நாட்டு பிரஜைகள் 5 பேர் தாக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.

இந்த சம்பவத்துடன், தொடர்புடைய குற்றச்சாட்டில் நான்கு சந்தேக நபரகள்; கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]