தமிழர்களின் ஆரம்ப கால அசைவ உணவுகளில் ஒன்று ஆட்டிறைச்சி

”மை ஊன் மொசித்த ஒக்கலொடு துறை நீர்த் கைமான் கொள்ளுமோ ?” என்ற புறநானூற்றுப் பாடலில் மை என்பது ஆட்டினைக் குறிக்கும்.இதிலிருந்து தமிழர் உணவுகளில் ஆட்டிறைச்சி முக்கியமானது என்பது புலனாகிறது.

இராமாயணம் போன்ற இதிகாசங்களில் கூட ஆடுகளை பலியிட்டு அதன் பின்னர் உண்டதாக கூறப்படுகிறது.

7ம் நூற்றாண்டு சீனப்பயணியான யுவான் சுவான் கூட ஆட்டிறைச்சியை இந்திய மக்கள் உண்டார்கள் என்று தனது குறிப்புக்களில் கூறியுள்ளார் .

12ம் நூற்றாண்டில் சோமேஸ்வர அரசனின் manasollasa நூலில் வெண்டைக்காய் பருப்பு பூண்டு எல்லாம் சேர்த்து ஆட்டிறைச்சி சமைக்கப்படுவதாகவும் அதன் பெயர் கவசண்டி  என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது .

13 ம்நூற்றாண்டில் இஸ்லாமியர்களின் பிரதான உணவாக ஆட்டிறைச்சி இருந்தததாக சொல்லப்படுகிறது .முகலாய அரண்மனைகளில் யாகினி என்ற பெயருடைய ஆட்டிறைச்சி பதார்த்தம் பிரபலமானது .

தயிரில் ஆட்டிறைச்சியை ஊறவைத்து இதனை செய்வதாக வரலாற்றில் சொல்லப்படுகிறது.

தமிழர்களிடம் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஆட்டிறைச்சி மிகபிரபலமான உணவு.multone என்பது இத்தாலிய மொழியில் ஆட்டினைக் குறிக்கும்.multon என்ற பிரெஞ்சு வார்த்தையை ஆட்டிறைச்சியை குறிக்கும் .இந்த வார்த்தையிலிருந்தே mutton என்ற பெயர் உருவானது.

உலகளாவிய ரீதியில் ஆட்டிறைச்சி பிரபல உணவாக இருந்தாலும் பிரான்ஸ் மக்கள் lamb உணவுகளையே அதிகம் விரும்புவர் lamb என்ற வார்த்தை lambiz என்ற ஜேர்மனிய வாரத்தையிலிருந்து வந்தது .ஒரு வயது நிரம்பிய ஆட்டுக்குட்டியே lamb.