800 பேருக்கு இரட்டைப் பிரஜா உரிமை வழங்க நடவடிக்கை

எதிர்வரும் 16ஆம் திகதி 800 பேருக்கு இரட்டைப் பிரஜா உரிமை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு, குடியல்வு கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு முதல் இதுவரையில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு இரட்டைப் பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாதாந்தம் இதற்காக சுமார் ஆயிரம் பேர் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதாக தெரிவித்த அவர், மேலும் 3 ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்கப்பட இருப்பதாக கூறியுள்ளார்.