முகப்பு Cinema 80 வயதுடைய மூப்படைந்த பெண்ணின் வேடத்தில் சமந்தா

80 வயதுடைய மூப்படைந்த பெண்ணின் வேடத்தில் சமந்தா

தமிழ், தெலுகு படங்களில் பிஸியாக நடித்து வரும் சமந்தா அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தில் 80 வயது பாட்டியாக வேடமிட உள்ளார் என தெரியவந்துள்ளது.

திருமாணத்திற்கு பின்னும் தன் மார்கெட்டை விட்டுவிடாமல் இறுக்கபிடித்துக் கொண்டிருக்கும் சமந்தா, முன்பைவிட இப்போது தான் படும் பிஸியாகியுள்ளார்.

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ரங்கஸ்தலம், நடிகையர் திலகம், இரும்புத்திரை உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சீமராஜா, யு டர்ன் செப்டம்பரில் வெளியாகவுள்ளது.

தற்போது, சேதிபதியுடன் சூப்பர் டீலக்ஸ் படம் , நாக சைதன்யாவுடன் பெயரிடபடாத மற்றொருபடத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக பிரபல கொரியன் பட ஒன்றின் தழுவலில் எடுக்கப்போகும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தில் அவர் 80 வயதுடைய மூப்படைந்த பெண்ணின் வேடத்தில் நடிக்கவிருக்கிறார் என தெரிய வந்துள்ளது. விரைவில் இப்படத்தை பற்றிய விவரங்கள் அதிகாரப் பூர்வமாக வெளியாகும் என கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com