8 மாத குழந்தையை கழுத்தை நெறித்துக் கொடூர கொலை செய்த தந்தை- அரியலூர் மாவட்டத்தில் சம்பவம்

அரியலூர் மாவட்டத்தில் மதுபோதையில் 8 மாத குழந்தையை கழுத்தை நெறித்துக் கொலை செய்த தந்தையை பொலீஸார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் – அனுராதா தம்பதிக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பிறந்த இரண்டாது பெண் குழந்தை திடீரென இறந்தது. இந்நிலையில் குழந்தை இறந்த அன்று குழந்தையின் தந்தை மணிகண்டன் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த பொலீசார், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த வந்த மணிகண்டனை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது மதுபோதையில் தனது குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்தததை மணிகண்டன் ஒப்புக்கொண்டார்.

இதனை அடுத்து மணிகண்டன் மீது கொலை செய்தல் மற்றும் கொலையை மறைத்தல் ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து அவரை பொலீசார் கைது செய்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]